ஏழு மலை தொடரில், 12 நகரங்கள், 100 சதுர கிமீ பரப்பளவில் (25,000 ஏக்கர்) அமைய இருக்கின்றன. நான்கு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
முதல் நிலை (தாஸ்வே
இந்த நகரங்களில் பல்வேறு அளவுகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நிரந்தரமாக தங்க விரும்புவர்கள், இயர்க்கையில் ஈடுபாடு உள்ளவர்கள், நகரங்களின் அன்றாட வேக வாழ்க்கையிலிருந்து விலக நினைப்பவர்கள், விடுமுறையில் இயற்கையுடன் பொழுது போக்க நினைப்பவர்கள் என பல்வேறு மக்களின் தேவைக்கேற்ப எல்லா வசதிகளுடன் வீடுகள் அமைக்கப் பட்டு வருகிறது.
மருத்துவமனை, வங்கிகள், பள்ளிகள், சுற்றுலா மையங்கள், பலதர ஹோட்டல்கள் (தங்கும் வசதியுடன்), உணவகங்கள், ஆராய்ச்சி மையங்கள் போன்ற விஷயங்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நகரங்கள் உருவாகி வருவதில் பல எதிர்ப்புகளும் உண்டு. சுற்றுப் புற சூழல் பாதிக்கப்படுகிறது என ஒரு கருத்து. புனேயின் 80% நீர் தேவை இங்கிருக்கும் வரஸ்காவ் ஏரியிலிருந்து செல்கிறது. இந்த நகரங்கள் உருவாகினால், புனேயில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என அஞ்சப்படுகிறது.
இதையெல்லாம் ஏன் இப்போது எழுதுகிறேன்? நான் என் வேலை நிமித்தமாக தாஸ்வே (லவாசா) அடிக்கடி சென்று வருகிறேன். இந்த இடத்தின் இயற்கை அழகு பிரமிப்பூட்டும் வண்ணம் உள்ளதால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். ஒரு முறை, 2 நாட்களுக்கு தங்கினேன். பெரும்பாலும், காலையில் (6 மணி) கிளம்பி
இந்த வேலை கூடுதல் சுவாரசியமாக உள்ளது.
நான் எடுத்த சில போட்டோக்களை நீங்கள் அனைவரும் பார்த்து அனுபவிக்க இணைத்துள்ளேன்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே சென்று படிக்கவும்.
1 comment:
லவாசாவைப் பற்றி இங்கைய செய்தித் தாள்களிலும் படிக்கிறோம் - முழுப் பக்க (அல்லது இரண்டு பக்க) விளம்பரமாகவோ, செய்தித் தொகுப்பாகவோ அடிக்கடி வரும்.
இயற்கை எழில் கொஞ்சுகிறது. ஃபோட்டோக்கள் அருமை.
Post a Comment