அக்டோபர் 2007 முதல், எல்லோரும் ஒன்று சேர்ந்து ஷிர்டி – நாசிக் செல்ல வேண்டும் என திட்டமிட்டு, 3 வருடங்களாக தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. இந்த முறை எப்படியாவது சென்று விட வேண்டும் என அப்பா, அம்மா சொல்லிக் கொண்டிருந்தனர். விஷ்ணு, ஜெயகிருஷ்ணா ஸ்கூல் திறப்பதற்கு முன்பே சென்றால் வசதியாக இருக்கும் எனவும், அதுவும் மழை காலத்திற்கு முன்பே இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர். 12 ஜுன் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதன்படி, அப்பா, அம்மா 10 ஜூன் தாணே வந்து சேர்ந்தனர்.
12 ஜூன் 2010 - ஷிர்டி
அப்பா, அம்மா, வைஷாலி, விஷ்ணு, சுதாகர், ரேவதி, ஜெயகிருஷ்ணா, வேங்கடகிருஷ்ணன் மற்றும் நான் என எல்லோரும் டவேரா வண்டியில் காலை 0800 மணிக்கு தாணேயிலிருந்து கிளம்பி சென்றோம். அன்று, அமாவாசையாதலால், அப்பா காலையில், தர்ப்பணம் செய்து விட்டு கிளம்பினார். வைஷாலி, ரேவதி காலை, டிபன், மற்றும் இரவு உணவு தயாரித்து வைத்திருந்தனர்.
நான் ஷிர்டி சென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக 2000 வருஷத்தில் சென்றது. முதன் முறையாக, ஜூலை 1997ல், அப்பாவின்
இதற்கு முன்பு வரை, ஷிர்டிக்கு, பூனாவிலிருந்து தான் சென்றிருக்கிறோம். முதல் முறையாக இந்த தடவை தாணேயிலிருந்து சென்றோம். நல்ல வழியாக இருந்த்து. கசாராவின் மலைப்பாதை
1430 மணிக்கு வரிசையில் நின்றுகொண்டோம். வாரக்கடைசி என்பதாலோ என்னவோ கூட்டம் அலை மோதியது. 3 மணி நேரம் வரிசையில் நின்ற பிறகே தரிசனம் கிடைத்தது. இருப்பினும் நேரம் போனது தெரியவில்லை. ஓம் சாய் நமோ நம: , ஸ்ரீ சாய் நமோ நம:, ஜெய ஜெய சாய் நமோ நம: , சத்குரு சாய் நமோ நம: என எல்லொரும் விடாமல் பாடிக் கொண்டிருந்த படியால் மனது லயித்து விட்டது. இடையில், சத்குரு சாய் மஹாராஜுக்கு என யாரோ ஒருவர் குரல் கொடுக்க அனைவரும் ”ஜே” என கோஷம் போட்டுக் கொண்டே வந்தோம்.
இப்படியே சன்னதிக்கு வந்து சேர்ந்து விட்டோம். பாபாவைக் காண கண் கோடி வேண்டும். எ

10 வருடங்கள் கழித்து ஷிர்டி கோயில் வருவதால், இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. ஷிர்டியிலேயே, மாலை 1830 ஆகிவிட்டதால், சனி சிங்கனாபூர் போக முடியாது என தோன்றியது. 85 கிமீ செல்ல வேண்டும். சனி அமாவாசை ஆதலால் அங்கும் கூட்டம் அலை மோதும் என விசாரித்த்தில் தெரிய வந்த்து. அதையும் மீறி சென்றாலும் அங்கு போய், நாசிக் சென்றடைய அதிகாலை 2 மணி ஆகும் என்று தோன்றியது. இந்த காரணங்களால், செல்ல வேண்டாம் என தீர்மானித்தோம். சனி சிங்கனாபூர் செல்ல வில்லையே என வருத்தம் இருந்த போதிலும், அது தான் சரியான முடிவாக பட்டது.
ஷிர்டியிலிருந்து மாலை 1915 மணிக்கு கிளம்பி நாசிக் வந்து சேர்ந்த போது மணி 2115. சுமார் 90 கிமீ பயணம். ஏற்கனவே ஹோட்டலில் அறைகள் முன் பதிவு செய்திருந்தோம். இரவு உணவு சாப்பிட்டு, கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு பாபாவை நினைத்துக் கொண்டு 2300 மணிக்கு அறைகளில் படுத்து தூங்கினோம்.
நாசிக் பயணம் தொடரும்.....
2 comments:
NICE WORK PERIAPPA
N.JAYAKRISHANA
உனக்கும், விஷ்ணுவுக்கும் தாத்தா சொல்லிக் கொடுத்த தமிழ் ஞாபகப் படுத்தவே எழுதினேன்.
நீ படித்து அதற்கு பதிலும் போட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது
உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.
பெரியப்பா
Post a Comment