Thursday, September 22, 2011

Memory Down the lane... 24 & counting....

A Real friend is one who walks IN when the rest of the world walks OUT
Don't walk in front of me , I may not follow
Don't walk behind me, I may not lead
Walk beside me and be my friend
A hug is worth a thousand words. A friend is worth more 

 A thought flashed across mind..... This is an attempt undertaken to showcase and portrait all my friends individually as I perceived and written all those fond memories associated with everyone as far as possible.

This attempt took a non-stop effort of 3 hours each day for 2 days. What better moment can it be apt than to present it to all of you in September? This week 24 years before, we were all filling out forms and enrolled ourselves.

The words are straight from heart and I thank Almighty for providing me such good friends in my life on behalf of HIM to represent.

The words may be less or more about anybody, but whatever it is, I value every one of you at par.

The beauty of this write up is that I did not think much as to what to write about each individual. It came like a flow, without any interruption, implying that you all have made such indelible impact on me..

When I finished this one, felt emotionally overwhelmed and certain lines made me shed happy tears…


Let us be like this for ever....


A series of blogs to follow on every individual......

Wednesday, September 15, 2010

விநாயகர் சதுர்த்தி



”விநாயகனே வினை தீர்ப்பவனே, வேத முதல்வோனே, ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம், குறைகள் தீர்க்க இதுவே தருணம்”



எங்களை பொறுத்தவரை, இந்த வருஷம், விநாயக சதுர்த்தியின் சிறப்பம்சம், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடியது. பல வருஷங்களாக இது போன்ற சந்தர்ப்பம் அமையவில்லை. இன்னும் சொல்லப் போனால், வரலஷ்மி விரதம், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என எல்லா பண்டிகைகளையும் சேர்ந்தே கொண்டாடினோம். ஆவணி அவிட்டம் மட்டும் நானும் சுதாகரும் சேர்ந்து பூணல் போட்டுக் கொண்டோம்.

அப்பா, அம்மா எங்களுடன் சேர்ந்து கொண்டு, பண்டிகை கொண்டாடியதில் எங்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
சுதாகர், ரேவதி நல்ல பெரிய பிள்ளையார் 10ம் தேதி வாங்கி வந்தனர். அதனுடன் பூஜைக்கு தேவையான பூ, பழம், என வாங்கி வந்தனர். அன்றே, அப்பா, அம்மா, விஷ்ணு, ஜெயகிருஷ்ணா, எங்கள் சொசைட்டியின் பெரிய தோட்டத்திலிருந்து பூக்களையும், இலைகளையும் பறித்து வந்தனர்.
                                                                                                











அன்று இரவு அம்மா, இரண்டு வீட்டிலும் கோலம் போட்டார். வீடு களை கட்ட ஆரம்பித்து விட்டது. எனக்கு, ஆபீஸ் இருந்ததால் நான் ஒன்றும் செய்யவில்லை. அதனால் என் பங்குக்கு வீட்டிற்கு வந்ததும், மின்சார சர விளக்கு அலங்காரம் செய்தேன்.



மறுநாள், 11 ம் தேதி, 11 மணிக்கு பூஜை ஆரம்பம் ஆனது. அப்பா மந்திரம் 


சொல்ல, விஷ்ணு, ஜெயகிருஷ்ணா பூஜை செய்தார்கள். இதுவும் ஒரு சிறப்பு. தாத்தா மந்திரம் சொல்ல இரண்டு பேரன்களும் பூஜை செய்வது இதுவே முதல் தடவை. சுமார்.12.45 மணிக்கு பூஜை நிறைவு பெற்றதுஎங்கள் வீட்டில் எல்லோருக்கும் சமையல் வைஷாலி செய்தாள். நெய்வேத்தியத்துக்கு வேண்டிய அனைத்தையும் அம்மா, ரேவதி கீழ் வீட்டில் செய்தார்கள்.




சொசைட்டியில் 5 நாள் பூஜை நடக்கிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஆரத்தி நடக்கிறது. பல கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. ஜெயகிருஷ்ணா 5 ஹிந்தி பாடல்கள் பாடினான். விஷ்ணுவுக்கு 13 ம் தேதியிலிருந்து முதல் செமஸ்டர்!! (Courtesy: CCE (Continuous Comprehensive Evaluation) of New Pattern CBSE) பரீட்சை ஆரம்பம் ஆனதால், அவன் கலந்து கொள்ளவில்லை. எங்களை பொறுத்தவரை இன்னும் பூஜை முடியவில்லை. சுதாகர் ஜாம்ஷெட்பூர் சென்றுள்ளதால், அவன் வந்த பிறகு விசர்ஜன் செய்ய எண்ணியுள்ளேன். .

ராஜா சித்தப்பா, வாசு, சுபா ஏற்கனவே அவரவர் வீட்டின் விநாயக சதுர்த்தியை அழகாக எழுதியிருந்தார்கள். நானும் இதை ஏற்கனவே எழுதி முடித்தாலும் இதை போஸ்ட் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.


ஆக மொத்தம் நல்ல விதமாக சிறப்பாக பூஜை நடத்தப் பட்டது. என் பங்கு PRO வேலை மட்டும் தான்!!!! அப்பா, அம்மா 12ம் தேதி பூனா திரும்பினார்கள்.


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்,
கோல துங்கக் கரிமுகத்து தூமணியே,
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
”ஜெய தேவ ஜெய தேவ ஸ்ரீ மங்கள மூர்த்தி,
தர்ஷன் மார்தே மன காமனா பூர்த்தி
ஜெய தேவ ஜெய தேவ”




.

Friday, September 10, 2010

லவாசா

புனே அருகில் உள்ள “லவாசா” இந்தியாவின் திட்டமிட்டு உருவாகிக் கொண்டிருக்கும் முதல் மலை நகரமாக பேசப்படுகிறது। இந்த நகரம் ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பனியின் மூலம் உருவாகி வருகிறது. 2002 ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த நகரம் 2021 ம் ஆண்டு முழுமை அடையும் என திட்டமிடப் பட்டுள்ளது.
ஏழு மலை தொடரில், 12 நகரங்கள், 100 சதுர கிமீ பரப்பளவில் (25,000 ஏக்கர்) அமைய இருக்கின்றன. நான்கு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.






முதல் நிலை (தாஸ்வே) 2010 டிசம்பருக்குள் முடிய இருக்கிறது. புனேயிலிருந்து 50 கிமீ, மற்றும் மும்பையிலிருந்து 180 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


இந்த நகரங்களில் பல்வேறு அளவுகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நிரந்தரமாக தங்க விரும்புவர்கள், இயர்க்கையில் ஈடுபாடு உள்ளவர்கள், நகரங்களின் அன்றாட வேக வாழ்க்கையிலிருந்து விலக நினைப்பவர்கள், விடுமுறையில் இயற்கையுடன் பொழுது போக்க நினைப்பவர்கள் என பல்வேறு மக்களின் தேவைக்கேற்ப எல்லா வசதிகளுடன் வீடுகள் அமைக்கப் பட்டு வருகிறது.


மருத்துவமனை, வங்கிகள், பள்ளிகள், சுற்றுலா மையங்கள், பலதர ஹோட்டல்கள் (தங்கும் வசதியுடன்), உணவகங்கள், ஆராய்ச்சி மையங்கள் போன்ற விஷயங்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நகரங்கள் உருவாகி வருவதில் பல எதிர்ப்புகளும் உண்டு. சுற்றுப் புற சூழல் பாதிக்கப்படுகிறது என ஒரு கருத்து. புனேயின் 80% நீர் தேவை இங்கிருக்கும் வரஸ்காவ் ஏரியிலிருந்து செல்கிறது. இந்த நகரங்கள் உருவாகினால், புனேயில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என அஞ்சப்படுகிறது.



இதையெல்லாம் ஏன் இப்போது எழுதுகிறேன்? நான் என் வேலை நிமித்தமாக தாஸ்வே (லவாசா) அடிக்கடி சென்று வருகிறேன். இந்த இடத்தின் இயற்கை அழகு பிரமிப்பூட்டும் வண்ணம் உள்ளதால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். ஒரு முறை, 2 நாட்களுக்கு தங்கினேன். பெரும்பாலும்,  காலையில் (6 மணி) கிளம்பி இரவு (9 மணி) திரும்புகிறேன் . செயயும் பல வேலைகளில், இயற்க்கையை அனுபவிக்க சந்தர்ப்பம் அமையும், 


இந்த வேலை கூடுதல் சுவாரசியமாக உள்ளது.
நான் எடுத்த சில போட்டோக்களை நீங்கள் அனைவரும் பார்த்து அனுபவிக்க இணைத்துள்ளேன்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே சென்று படிக்கவும்.


Sunday, July 4, 2010

நினைவஞ்சலி

ழகான கவிதை
ழமான கருத்து
னிய நடை
ர்த்தது மனதை
ள்ளம் குளிர்ந்தது
ரறிந்த உண்மை
ங்களருமை பாட்டியின் பெருமை
ற்றமடைகிறது தினமும்
யமில்லாத திண்மை
ரு கவிதை சொன்னீர்கள்
ரமாக நின்று ரசித்தோம்
வை பாட்டியின் (ஆத்திச்சூடி) வழி
அஃதே என் பாராட்டு மொழி

Wednesday, June 30, 2010

நாசிக் - 13 ஜூன் 2010 - பாகம் 2


தபோவனதிலிருந்து கிளம்பிமுக்தி தாம்என்ற இடத்திற்கு அடுத்த படியாக வந்தோம்.

முக்தி தாம் (Mukthi Dhaam):
முக்தி தாம் என்ற இந்த கோவில்நாசிக் ரோடில்அமைந்துள்ளது. (நாசிக்கின் ரயில் நிலையம், நாசிக் ரோடில் தான் உள்ளது.). ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு கற்களால், ராஜஸ்தானிய சிற்பிகளால் கட்டப்பட்ட மிக அழகான கோயில். இந்த கோயில் 1988ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் சிறப்பம்சம், எல்லா சுவர்களிலும் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் எழுதப்பட்டுள்ளது. சிவன், ராமர், சீதை, லஷ்மணர், திருப்பதி வெங்கடேச பெருமாள், லஷ்மி, என பல திரு உருவங்களை வடித்திருக்கிறார்கள். மிக அற்புதமான வேலைப்பாடு. 12 ஜோதிர் லிங்கங்களையும் இங்கு காணலாம். வரைபடம் போல எல்லா லிங்கங்களையும் அந்தந்த இடத்திற்கு ஏற்ப அமைத்திருப்பது சிறப்பான விஷயம். சுமார் 45 நிமிடம் அந்த கோயிலில் இருந்தோம். மத்தியானம் 1 மணி ஆகி விட்ட்தால் எல்லோருக்கும் நல்ல பசி. நல்ல உணவகம் தேடி கிடைக்காததால் (தெரியாததால்) பாண்டவ் லேணி செல்லும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம்.

செல்லும் வழியில் ஒரு நல்ல ஹோட்டல் தென்பட்டதால் அங்கு சாப்பிட இறங்கினோம். “நல்லதென்னிந்திய சாப்பாடு கிடைக்கும் என பரிமாறுபவன் சொல்ல நாங்களும் உற்சாகம் ஆனோம். சொன்ன மாதிரியே சாப்பாடு நன்றாகவே இருந்த்து. என்ன தென்னிந்திய சாப்பாடு என்ற பெயர் சூட்டிமஹாராஷ்ட்ராதாலி (தட்டு) உபசரித்தான். பின்னர், பாண்டவ் லேணி சென்றோம்.

பாண்டவ் லேணி: மராத்தியில் லேணிஎன்றால்குகைஎன்று அர்த்தம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஜைன அரசர்களால் கட்டப்பட்டது. குகைகளில் உள்ளே எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், 17ம் நூற்றாண்டில், பாண்டவர்களால் எழுதப்பட்டதாம். அதனால் பெயரும் பாண்டவ் லேணி என அமைந்த்து. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இந்த குகைகள் உள்ளன. இந்த குகைகள், புத்தர் காலத்தை சேர்ந்த்து. மேலும், இது முந்தைய காலத்தில் தியானம் செய்வதற்கு புத்த மதத்தை சேர்ந்தவர்களால் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.



கீழே, ஒரு பெரிய புத்தர் கோயில் உள்ளது. 3, 4 ஆள் உயரம் கொண்ட ஒரு புத்தர் சிலை உள்ளது. அரை கோள வடிவத்தில் கோயில் உள்ளது. அமைதியாக கோயிலில் 10 நிமிடங்கள் இருந்தோம். பின்னர் 3000 அடி மேலே உள்ள குகைக்கு செல்ல நினைத்தபோது, அப்பா, தான் கீழேயே இருப்பதாக சொல்லிவிட்டார். நாங்கள் அனைவரும் மேலே செல்ல ஆரம்பித்த போது, முதல் 2 நிமிடங்களிலேயே, அம்மாவும் ஏற முடியவில்லை என திரும்பிவிட்டார். பின்னர், வைஷாலி, சுதாகர், ரேவதி என ஒவ்வொருவராக திரும்பி கீழே சென்று விட்டனர். உண்ட மயக்கம், கைகுழந்தை, மிகவும் செங்குத்தான பாதை, படிகள் என ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள்.!!

விஷ்ணுவும், ஜெயகிருஷ்ணாவுக்கும் மேலே சென்று விட வேண்டும் என ஒரே வேட்கை. இருவரும் வேகமாக ஏறிக் கொண்டிருக்க நானும் கூடவே அவர்கள் உற்சாகத்தை குறைக்காத விதத்தில் அவர்களுக்கு ஈடுகொடுத்தேன். ஆனாலும் 90% ஏறிய பிறகு களைப்பாகத்தான் இருந்தது. இப்படி ஏற வேண்டும் என தெரிந்திருந்தால் சாப்பிடுவதற்கு முன்னாலேயே
வந்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுந்தது. இருவரும் கொடுத்த உற்சாகத்தில், மீதமும் ஏறி உச்சிக்கு சென்று விட்டோம்.

ஆஹா, என்ன அருமை!!! நாசிக் முழு நகரம் எங்கள் மூவரின் கண்களில் தென்பட்ட காட்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கஷ்டப்பட்டு ஏறியதற்கு கை மேல் பலன்!!. காமெரா கண்களின் மூலம் விஷ்ணுவும், ஜெயகிருஷ்ணாவும் படம் பிடித்து தள்ளினார்கள். மேலே வந்ததும் எனக்கு மட்டும் தான் நுழைவு சீட்டு (5 ரூபாய்). 15 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு அனுமதி இலவசம்.
புத்தர், போதிசத்வர், ஜைன தீர்த்தங்கரர் போன்ற பல மகான்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகைகள் அவர்களின் வாச ஸ்தலமாகவும், போதனை இடமாகவும் அமைந்திருந்தது. ஏறியதை விட இறங்கும் போது இன்னமும் ஜாக்கிரதையாக இருந்தோம். இருவருக்கும் மகா திருப்தி….. அங்கிருந்து புகழ் பெற்ற த்ரியம்பகேஷ்வருக்கு பயணமானோம். மாலை 4.30க்கு கோயில் போய் சேர்ந்தோம்.

த்ரியம்பகேஷ்வர்: இந்த கோயில் நாசிக்கிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற 12 ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்று. பிரம்மகிரி மலை அடிவாரத்தில், மலையின் பின்னணியில் கோயில் அமைந்துள்ளது. பிரம்மகிரி மலையில் தான் கோதாவரியின் ஜன்ம ஸ்தானம். எப்படி கங்கைக்குபாகீரதிஎன்று பெயர் உள்ளதோ, அதேபோல், கோதாவரிக்கும், ”கெளதமி கங்காஎன்று பெயர் உள்ளது.

கெளதம முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு சிவபெருமான் வந்ததால், இந்த கோயில் அமைந்தது என சிவபுராணம் கூறுகிறது. மேலும் கெளதம முனிவரின் ப்ரார்த்தனைக்கு இணங்கி, சிவபெருமான் தன் சிரசிலிருந்து கங்கையை அனுப்பி வைத்தாராம். அதனால் தான், கோதாவரிக்குகெளதமி கங்காஎன்று பெயர் அமைந்தது.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் மூன்று கண்களாக, மூன்று சிவ லிங்கங்களாக இருப்பதால், த்ரியம்பகேஷ்வர் என அழைக்கப்படுகிறார். எல்லா சிவ ஸ்தலங்களிலும் சிவ லிங்கம் வெளியில் கண்களுக்கு தெரியும். இங்கு மட்டும் பூமிக்கு அடியில் உள்ளது. மேலே வெள்ளி கவசம் அணிவித்து இருந்தார்கள். மூன்று சிவ லிங்கங்களில், (பிரம்மா, விஷ்ணு, மகேஷா) கோதாவரி மகேஷா சிவ லிங்கத்திற்கு மட்டும் பூமிக்கு அடியிலிருந்து நீருற்று பிரவாகம் எடுக்கிறது!! அதனால் இங்கு சிவ பெருமானுக்கு தண்ணீர் அபிஷேகம் கிடையாது!!

ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகு அருமையான தரிசனம் கிடைத்தது. இந்த கோயிலில் நுழைவதற்கு முன்னர், வாசலில் உள்ள காளை மற்றும் பசு மாட்டிற்கு எல்லோரும் புல் கொடுப்பது வழக்கம். நாங்களும் கொடுத்தோம்மாலை 6.45 மணிக்கு கிளம்பி இரவு 11 மணிக்கு தாணே வந்து சேர்ந்தோம்.

இப்படியாக, எங்களின் ஷிர்டி, நாசிக் பயணம் இனிதே நிறைவுற்றது. சாய் பாபா, ராமாயணம் மற்றும் மஹாபாரத இடங்கள், ஜோதிர் லிங்கம்,ஒரு நதியின் கதை, புத்த ஜைன இடங்கள் என பார்த்ததில் மன நிறைவு பெற்றோம்.

நாசிக்கிற்கு, 1997ல், விமான மராமத்து பயிற்சிக்காக சென்றிருந்தேன். ஆனால் அப்போது ஒன்றும் பார்க்க இயலாத சூழ்நிலை. இரண்டு வாரக் கடைசியில் பூனா வந்து விட்டேன். பிள்ளையார் சதுர்த்தி நேரம். மீதமிருந்த இரு வாரங்களில் பயிற்சி பணியிலேயே மூழ்கி விட்டேன் (ஞாயிறு கிழமைகளும் உள்பட). 13 வருட விட்ட குறை, தொட்ட குறை 2010 ஜூனில் தீர்ந்தது.

மேலும் பல இடங்கள் நாசிக்கில் உள்ளது. குறைந்த பட்சம் 3 நாட்கள் தேவை. நாணய பொருட்காட்சி சாலை குறிப்பிடதக்கது. நாங்கள் நேரப் பற்றாக்குறையால் பார்க்க இயலவில்லை.

பி.கு: ரூபாய் அச்சடிக்கும் இடம் இங்கு உள்ளது!!! ஆனால் என்ன, அப்பா சொன்ன மாதிரி, ”கட்டு கட்டாக” கொண்டு வர இயலவில்லை. போனால் போகிறது ரூபாய் கிடைக்காவிட்டால் என்ன, என 12 கிலோ பெரிய வெங்காயம் திரும்பி வரும் வழியில் ரூ. 40க்கு வாங்கினோம்.



Tuesday, June 22, 2010

நாசிக் - 13 ஜூன் 2010

13 ஜூன் 2010 – நாசிக்
காலையில் எல்லோரும் எழுந்து குளித்து 0800 மணிக்கு தயாராகி விட்டோம். காலை சிற்றுண்டி, தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்ப தயாரானோம். முதலில் பஞ்சவடிக்கு போகலாம் என தீர்மானித்தோம். நாசிக் ஒரு விதத்தில் நம்ம கும்பகோணம் போல் தான். கோயில்கள் நிறைந்த, அழகான ஊர். பாதைகள் நல்ல அகலமாக உள்ளது. பஞ்சவடி நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சுமார் 2 கிமீ தூரம்.

பஞ்சவடி: ராமர், சீதா, ல‌ஷ்மணர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்த போது இந்த கோதாவரி நதிக் கரையில் நீராடி உள்ளனர்.!! அவர்கள் பர்ணசாலையும் இங்கு இருந்துள்ளது. இங்கு, ராமர் குண்டம், லஷ்மணர் குண்டம், சீதா குண்டம் என தனித்தனியாக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா இங்கு மிக பிரசித்தம். ராமாயணத்தோடு ஒன்றி விட்ட ஒரு உணர்வு. அங்கிருந்த அனைத்து கோயில் சன்னதிகளையும் பார்த்தோம். கங்கே ச, யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி, ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு என ஜபித்து கொண்டு, ஜலத்தை ப்ரோஷணம் செய்து கொண்டோம். கோதாவரியில், புஷ்பம், நெய் விளக்கு, அடங்கிய தெப்பம் விட்டோம். பஞ்சவடியில் தங்க முலாம் பூசிய ராமர், சீதை, லஷ்மணர் பொறித்த சாவி கொத்து அப்பா எங்களுக்கு வாங்கி கொடுத்தார். அடுத்த படியாக காலா ராம் மந்திர் என்ற கோயிலுக்கு வந்தோம்.

காலா ராம் மந்திர்: 1790 ஆம் ஆண்டு, சர்தார் ஒதெகரால் கட்டப்பட்டது. கருங்கல் ராமர் இந்த கோயிலில் உள்ளதால், இந்த கோயிலின் பெயர் கருப்பு (காலா) ராமர் கோயில் என அழைக்கப் படுகிறது. நான்கு திசைகளிலும் பெரிய வாயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பம் 32 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. இந்த கோயிலின் கற்கள், ராம்ஷேஜ் என்னும் மலையிலிருந்து 23 லட்ச செலவில் 1930 ம் ஆண்டு வரவழைக்கப் பட்டதாம்..கோயில் சுமார் 70 அடி உயரம் கட்டப் பட்டுள்ளது. ப்ரஹாரம் விசாலமாக இருக்கிறது. இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ராமர் வனவாசம் இருந்த போது குடியிருந்த இடம்!!
ஸ்ரீ ராமா என்றுரைத்தால் செல்வம் தழைத்தோங்கும்
ஸ்ரீ ராமா என்றுரைத்தால் சிறப்புண்டாகும்
ஸ்ரீ ராமா அன்பர்களை என்றும் ஆதரிப்பார், துன்பங்களை தீர்ப்பார்
அய்யனே எனையாளும் மெய்யனே ஸ்ரீமதே ராமானுஜாய நம:
என்ற வரிகள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. கோயிலின் வாசலில், தாமிரத்தில் செய்யப் பட்ட விளக்குகள் எல்லோருக்கும் வாங்கி கொடுத்தார். அங்கிருந்து அடுத்த படியாக தபோவனம் என்ற இடத்திற்கு வந்தோம்.

தபோவனம்: இதற்கு ’தண்டகாரண்ய’ ஷேத்திரம். தண்டகாரண்யம் ராமாயணம் படித்த, அறிந்த அனைவருக்கும் பரிச்சயம் உள்ள பிரசித்தி பெற்ற இடம். ராமர் மற்றும் லஷ்மணர் தியானம் செய்த இடம். சூர்ப்பனகையின் நாசியை சேதம் செய்த ’இடமும்’ இதுதான். அதனாலேயே, இந்த ஊரின் பெயரும் “நாசிக்” என அழைக்கப் படுகிறது. பஞ்சவடி, மற்றும் தபோவனதிற்கு இடையில் தான் மாரீசன் மானாக வந்தது, ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போனது என குறிப்பு சொல்கிறது. இங்கு கபில – கோதாவரி நதிகளின் சங்மத்தை காணலாம். இந்தியாவில் இங்கு மட்டும் தான் லஷ்மணருக்கு கோயில் உள்ளது. இந்திரஜித்தை வதம் செய்ய 12 ஆண்டுகள் தவம் இருந்த இடம் என மற்றொரு குறிப்பு தெரிவிக்கிறது.. மிக அழகான, அமைதியான இடம். மலை குன்றின் (சுமார் 200 அடி உயரம்) மேல், தகரத்தில், ராமர், சீதை, லஷ்மணரின் சன்னியாச கோலம் அமைக்கப் பட்டுள்ளது. விஷ்ணு, ஜெயகிருஷ்ணா மேலே சென்று தொட்டு வர ஆசைபட்டதால், நாங்கள் மூவர் மேலே ஏறி தொட்டு வந்தோம். இருவருக்கும் எதோ எவரெஸ்ட் ஏறியது போல ஒரே பெருமை.

நாசிக் இன்னும் வரும்……..

Sunday, June 20, 2010

ஷிர்டி பயணம் - 12 ஜூன் 2010


அக்டோபர் 2007 முதல், எல்லோரும் ஒன்று சேர்ந்து ஷிர்டிநாசிக் செல்ல வேண்டும் என திட்டமிட்டு, 3 வருடங்களாக தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. இந்த முறை எப்படியாவது சென்று விட வேண்டும் என அப்பா, அம்மா சொல்லிக் கொண்டிருந்தனர். விஷ்ணு, ஜெயகிருஷ்ணா ஸ்கூல் திறப்பதற்கு முன்பே சென்றால் வசதியாக இருக்கும் எனவும், அதுவும் மழை காலத்திற்கு முன்பே இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர். 12 ஜுன் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதன்படி, அப்பா, அம்மா 10 ஜூன் தாணே வந்து சேர்ந்தனர்.


12 ஜூன் 2010 - ஷிர்டி


அப்பா, அம்மா, வைஷாலி, விஷ்ணு, சுதாகர், ரேவதி, ஜெயகிருஷ்ணா, வேங்கடகிருஷ்ணன் மற்றும் நான் என எல்லோரும் டவேரா வண்டியில் காலை 0800 மணிக்கு தாணேயிலிருந்து கிளம்பி சென்றோம். அன்று, அமாவாசையாதலால், அப்பா காலையில், தர்ப்பணம் செய்து விட்டு கிளம்பினார். வைஷாலி, ரேவதி காலை, டிபன், மற்றும் இரவு உணவு தயாரித்து வைத்திருந்தனர்.


நான் ஷிர்டி சென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக 2000 வருஷத்தில் சென்றது. முதன் முறையாக, ஜூலை 1997ல், அப்பாவின் 60வது பிறந்த நாளை ஷிர்டியில் கொண்டாடினோம். மீண்டும் அடுத்த வருடம் இரண்டாவது முறையாக சென்றோம். சரோஜா அத்தை, ராமமூர்த்தி அத்திம்பேருடன் 2000 வருஷம் மூன்றாம் முறை. ஆக இது நான்காம் முறையாக சாய்பாபாவை தரிசிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது.


இதற்கு முன்பு வரை, ஷிர்டிக்கு, பூனாவிலிருந்து தான் சென்றிருக்கிறோம். முதல் முறையாக இந்த தடவை தாணேயிலிருந்து சென்றோம். நல்ல வழியாக இருந்த்து. கசாராவின் மலைப்பாதை வளைந்து நெளிந்து போகும் பாதை. இதமான, ஈரப்பதமான காற்று என காலை பொழுது ரம்மியமாக அமைந்தது. சின்னார் வந்ததும், ஷிர்டி போகும் பாதை பிடித்து 1330 மணிக்கு ஷிர்டி சென்றடைந்தோம். சுமார் 230 கிமீ பயணம் செய்தோம். ஆந்திரா பவனில் எங்கள் மதிய உணவு உட்கொண்டோம். அருமையா, சுவையான, அன்பான சாப்பாடு. ஆந்திரா காரம் அதிகமாகவே இருந்த்து. நன்றாக வரவேற்று உபசரித்தனர்.

1430 மணிக்கு வரிசையில் நின்றுகொண்டோம். வாரக்கடைசி என்பதாலோ என்னவோ கூட்டம் அலை மோதியது. 3 மணி நேரம் வரிசையில் நின்ற பிறகே தரிசனம் கிடைத்தது. இருப்பினும் நேரம் போனது தெரியவில்லை. ஓம் சாய் நமோ நம: , ஸ்ரீ சாய் நமோ நம:, ஜெய ஜெய சாய் நமோ நம: , சத்குரு சாய் நமோ நம: என எல்லொரும் விடாமல் பாடிக் கொண்டிருந்த படியால் மனது லயித்து விட்டது. இடையில், சத்குரு சாய் மஹாராஜுக்கு என யாரோ ஒருவர் குரல் கொடுக்க அனைவரும் ஜே என கோஷம் போட்டுக் கொண்டே வந்தோம்.


இப்படியே சன்னதிக்கு வந்து சேர்ந்து விட்டோம். பாபாவைக் காண கண் கோடி வேண்டும். த்தனை பேர் தினமும் வந்த வண்ணம் இருக்கின்றனர். வரிசையில் பல மணி நேரம் ஆனாலும், கடினமாக இருந்த போதிலும், பாபாவைக் கண்டவுடன், எல்லாம் பனி போல கரைந்து விடுகிறது, தரிசனம் செய்கிற அந்த கணங்கள் நம்மை நாமே மறந்து அவரிடம் சமர்ப்பிக்கும் போது கிடைக்கிற சுகமே தனி. தரிசனம் முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு ஆத்ம திருப்தி அடைந்தோம். தரிசனம் முடிந்து ஒரு மணி நேரம் கோயிலில் இருந்தோம். “உதிஎனப்படும் பாபாவின் விபூதியை எடுத்துக் கொண்டோம்.


10 வருடங்கள் கழித்து ஷிர்டி கோயில் வருவதால், இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது. ஷிர்டியிலேயே, மாலை 1830 ஆகிவிட்டதால், சனி சிங்கனாபூர் போக முடியாது என தோன்றியது. 85 கிமீ செல்ல வேண்டும். சனி அமாவாசை ஆதலால் அங்கும் கூட்டம் அலை மோதும் என விசாரித்த்தில் தெரிய வந்த்து. அதையும் மீறி சென்றாலும் அங்கு போய், நாசிக் சென்றடைய அதிகாலை 2 மணி ஆகும் என்று தோன்றியது. இந்த காரணங்களால், செல்ல வேண்டாம் என தீர்மானித்தோம். சனி சிங்கனாபூர் செல்ல வில்லையே என வருத்தம் இருந்த போதிலும், அது தான் சரியான முடிவாக பட்டது.


ஷிர்டியிலிருந்து மாலை 1915 மணிக்கு கிளம்பி நாசிக் வந்து சேர்ந்த போது மணி 2115. சுமார் 90 கிமீ பயணம். ஏற்கனவே ஹோட்டலில் அறைகள் முன் பதிவு செய்திருந்தோம். இரவு உணவு சாப்பிட்டு, கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு பாபாவை நினைத்துக் கொண்டு 2300 மணிக்கு அறைகளில் படுத்து தூங்கினோம்.

பி.கு: மொபைல் போன், காமெரா தற்போது ஷிர்டி கோயிலில் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதை வைத்துக் கொள்ள தனி க்ளோக் ரூம் வசதி ஏற்பாடு உள்ளது. ஒரு பொருளுக்கு 2/= வாடகை.


நாசிக் பயணம் தொடரும்.....