Showing posts with label Dasve. Show all posts
Showing posts with label Dasve. Show all posts

Friday, September 10, 2010

லவாசா

புனே அருகில் உள்ள “லவாசா” இந்தியாவின் திட்டமிட்டு உருவாகிக் கொண்டிருக்கும் முதல் மலை நகரமாக பேசப்படுகிறது। இந்த நகரம் ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பனியின் மூலம் உருவாகி வருகிறது. 2002 ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த நகரம் 2021 ம் ஆண்டு முழுமை அடையும் என திட்டமிடப் பட்டுள்ளது.
ஏழு மலை தொடரில், 12 நகரங்கள், 100 சதுர கிமீ பரப்பளவில் (25,000 ஏக்கர்) அமைய இருக்கின்றன. நான்கு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.






முதல் நிலை (தாஸ்வே) 2010 டிசம்பருக்குள் முடிய இருக்கிறது. புனேயிலிருந்து 50 கிமீ, மற்றும் மும்பையிலிருந்து 180 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


இந்த நகரங்களில் பல்வேறு அளவுகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நிரந்தரமாக தங்க விரும்புவர்கள், இயர்க்கையில் ஈடுபாடு உள்ளவர்கள், நகரங்களின் அன்றாட வேக வாழ்க்கையிலிருந்து விலக நினைப்பவர்கள், விடுமுறையில் இயற்கையுடன் பொழுது போக்க நினைப்பவர்கள் என பல்வேறு மக்களின் தேவைக்கேற்ப எல்லா வசதிகளுடன் வீடுகள் அமைக்கப் பட்டு வருகிறது.


மருத்துவமனை, வங்கிகள், பள்ளிகள், சுற்றுலா மையங்கள், பலதர ஹோட்டல்கள் (தங்கும் வசதியுடன்), உணவகங்கள், ஆராய்ச்சி மையங்கள் போன்ற விஷயங்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நகரங்கள் உருவாகி வருவதில் பல எதிர்ப்புகளும் உண்டு. சுற்றுப் புற சூழல் பாதிக்கப்படுகிறது என ஒரு கருத்து. புனேயின் 80% நீர் தேவை இங்கிருக்கும் வரஸ்காவ் ஏரியிலிருந்து செல்கிறது. இந்த நகரங்கள் உருவாகினால், புனேயில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என அஞ்சப்படுகிறது.



இதையெல்லாம் ஏன் இப்போது எழுதுகிறேன்? நான் என் வேலை நிமித்தமாக தாஸ்வே (லவாசா) அடிக்கடி சென்று வருகிறேன். இந்த இடத்தின் இயற்கை அழகு பிரமிப்பூட்டும் வண்ணம் உள்ளதால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். ஒரு முறை, 2 நாட்களுக்கு தங்கினேன். பெரும்பாலும்,  காலையில் (6 மணி) கிளம்பி இரவு (9 மணி) திரும்புகிறேன் . செயயும் பல வேலைகளில், இயற்க்கையை அனுபவிக்க சந்தர்ப்பம் அமையும், 


இந்த வேலை கூடுதல் சுவாரசியமாக உள்ளது.
நான் எடுத்த சில போட்டோக்களை நீங்கள் அனைவரும் பார்த்து அனுபவிக்க இணைத்துள்ளேன்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே சென்று படிக்கவும்.