Wednesday, September 15, 2010

விநாயகர் சதுர்த்தி



”விநாயகனே வினை தீர்ப்பவனே, வேத முதல்வோனே, ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம், குறைகள் தீர்க்க இதுவே தருணம்”



எங்களை பொறுத்தவரை, இந்த வருஷம், விநாயக சதுர்த்தியின் சிறப்பம்சம், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடியது. பல வருஷங்களாக இது போன்ற சந்தர்ப்பம் அமையவில்லை. இன்னும் சொல்லப் போனால், வரலஷ்மி விரதம், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி என எல்லா பண்டிகைகளையும் சேர்ந்தே கொண்டாடினோம். ஆவணி அவிட்டம் மட்டும் நானும் சுதாகரும் சேர்ந்து பூணல் போட்டுக் கொண்டோம்.

அப்பா, அம்மா எங்களுடன் சேர்ந்து கொண்டு, பண்டிகை கொண்டாடியதில் எங்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
சுதாகர், ரேவதி நல்ல பெரிய பிள்ளையார் 10ம் தேதி வாங்கி வந்தனர். அதனுடன் பூஜைக்கு தேவையான பூ, பழம், என வாங்கி வந்தனர். அன்றே, அப்பா, அம்மா, விஷ்ணு, ஜெயகிருஷ்ணா, எங்கள் சொசைட்டியின் பெரிய தோட்டத்திலிருந்து பூக்களையும், இலைகளையும் பறித்து வந்தனர்.
                                                                                                











அன்று இரவு அம்மா, இரண்டு வீட்டிலும் கோலம் போட்டார். வீடு களை கட்ட ஆரம்பித்து விட்டது. எனக்கு, ஆபீஸ் இருந்ததால் நான் ஒன்றும் செய்யவில்லை. அதனால் என் பங்குக்கு வீட்டிற்கு வந்ததும், மின்சார சர விளக்கு அலங்காரம் செய்தேன்.



மறுநாள், 11 ம் தேதி, 11 மணிக்கு பூஜை ஆரம்பம் ஆனது. அப்பா மந்திரம் 


சொல்ல, விஷ்ணு, ஜெயகிருஷ்ணா பூஜை செய்தார்கள். இதுவும் ஒரு சிறப்பு. தாத்தா மந்திரம் சொல்ல இரண்டு பேரன்களும் பூஜை செய்வது இதுவே முதல் தடவை. சுமார்.12.45 மணிக்கு பூஜை நிறைவு பெற்றதுஎங்கள் வீட்டில் எல்லோருக்கும் சமையல் வைஷாலி செய்தாள். நெய்வேத்தியத்துக்கு வேண்டிய அனைத்தையும் அம்மா, ரேவதி கீழ் வீட்டில் செய்தார்கள்.




சொசைட்டியில் 5 நாள் பூஜை நடக்கிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஆரத்தி நடக்கிறது. பல கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. ஜெயகிருஷ்ணா 5 ஹிந்தி பாடல்கள் பாடினான். விஷ்ணுவுக்கு 13 ம் தேதியிலிருந்து முதல் செமஸ்டர்!! (Courtesy: CCE (Continuous Comprehensive Evaluation) of New Pattern CBSE) பரீட்சை ஆரம்பம் ஆனதால், அவன் கலந்து கொள்ளவில்லை. எங்களை பொறுத்தவரை இன்னும் பூஜை முடியவில்லை. சுதாகர் ஜாம்ஷெட்பூர் சென்றுள்ளதால், அவன் வந்த பிறகு விசர்ஜன் செய்ய எண்ணியுள்ளேன். .

ராஜா சித்தப்பா, வாசு, சுபா ஏற்கனவே அவரவர் வீட்டின் விநாயக சதுர்த்தியை அழகாக எழுதியிருந்தார்கள். நானும் இதை ஏற்கனவே எழுதி முடித்தாலும் இதை போஸ்ட் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.


ஆக மொத்தம் நல்ல விதமாக சிறப்பாக பூஜை நடத்தப் பட்டது. என் பங்கு PRO வேலை மட்டும் தான்!!!! அப்பா, அம்மா 12ம் தேதி பூனா திரும்பினார்கள்.


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்,
கோல துங்கக் கரிமுகத்து தூமணியே,
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
”ஜெய தேவ ஜெய தேவ ஸ்ரீ மங்கள மூர்த்தி,
தர்ஷன் மார்தே மன காமனா பூர்த்தி
ஜெய தேவ ஜெய தேவ”




.

Friday, September 10, 2010

லவாசா

புனே அருகில் உள்ள “லவாசா” இந்தியாவின் திட்டமிட்டு உருவாகிக் கொண்டிருக்கும் முதல் மலை நகரமாக பேசப்படுகிறது। இந்த நகரம் ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பனியின் மூலம் உருவாகி வருகிறது. 2002 ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த நகரம் 2021 ம் ஆண்டு முழுமை அடையும் என திட்டமிடப் பட்டுள்ளது.
ஏழு மலை தொடரில், 12 நகரங்கள், 100 சதுர கிமீ பரப்பளவில் (25,000 ஏக்கர்) அமைய இருக்கின்றன. நான்கு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.






முதல் நிலை (தாஸ்வே) 2010 டிசம்பருக்குள் முடிய இருக்கிறது. புனேயிலிருந்து 50 கிமீ, மற்றும் மும்பையிலிருந்து 180 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


இந்த நகரங்களில் பல்வேறு அளவுகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நிரந்தரமாக தங்க விரும்புவர்கள், இயர்க்கையில் ஈடுபாடு உள்ளவர்கள், நகரங்களின் அன்றாட வேக வாழ்க்கையிலிருந்து விலக நினைப்பவர்கள், விடுமுறையில் இயற்கையுடன் பொழுது போக்க நினைப்பவர்கள் என பல்வேறு மக்களின் தேவைக்கேற்ப எல்லா வசதிகளுடன் வீடுகள் அமைக்கப் பட்டு வருகிறது.


மருத்துவமனை, வங்கிகள், பள்ளிகள், சுற்றுலா மையங்கள், பலதர ஹோட்டல்கள் (தங்கும் வசதியுடன்), உணவகங்கள், ஆராய்ச்சி மையங்கள் போன்ற விஷயங்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நகரங்கள் உருவாகி வருவதில் பல எதிர்ப்புகளும் உண்டு. சுற்றுப் புற சூழல் பாதிக்கப்படுகிறது என ஒரு கருத்து. புனேயின் 80% நீர் தேவை இங்கிருக்கும் வரஸ்காவ் ஏரியிலிருந்து செல்கிறது. இந்த நகரங்கள் உருவாகினால், புனேயில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என அஞ்சப்படுகிறது.



இதையெல்லாம் ஏன் இப்போது எழுதுகிறேன்? நான் என் வேலை நிமித்தமாக தாஸ்வே (லவாசா) அடிக்கடி சென்று வருகிறேன். இந்த இடத்தின் இயற்கை அழகு பிரமிப்பூட்டும் வண்ணம் உள்ளதால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். ஒரு முறை, 2 நாட்களுக்கு தங்கினேன். பெரும்பாலும்,  காலையில் (6 மணி) கிளம்பி இரவு (9 மணி) திரும்புகிறேன் . செயயும் பல வேலைகளில், இயற்க்கையை அனுபவிக்க சந்தர்ப்பம் அமையும், 


இந்த வேலை கூடுதல் சுவாரசியமாக உள்ளது.
நான் எடுத்த சில போட்டோக்களை நீங்கள் அனைவரும் பார்த்து அனுபவிக்க இணைத்துள்ளேன்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே சென்று படிக்கவும்.