Showing posts with label சின்ன சின்ன ஆசை. Show all posts
Showing posts with label சின்ன சின்ன ஆசை. Show all posts

Tuesday, November 18, 2008

பிள்ளையார் சுழி

சின்ன சின்ன ஆசை
எழுத நிறைய ஆசை

பல வருடங்களின் கனவு
நவம்பர் 2008இல் ஆனது நனவு

எதில் தொடங்குவது என்பதில் குழப்பம்
எதையாவது எழுத வேண்டும் என்ற ஏக்கம்

எப்படி எழுதுவது என்ற தயக்கம்
எனக்கு என்ன தெரியும் என்ற மயக்கம்

மீண்டும் மீண்டும் கிடைத்தது ஊக்கம்
என் மனதில் தோன்றியது ஆக்கம்

யோசித்ததில் தோன்றியது வானமே எல்லை
பெயரை வைத்து விட்ட பிறகு கவலையே இல்லை

முதன் முதலாக எழுத நினைத்து, போட்டேன் பிள்ளையார் சுழி
ஆனால் நடந்தது என்னவோ ராஜேந்தர் வழி...............